Wednesday, October 28, 2026

நோ மீன்ஸ் நோ பிரபல இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தனியாளாக போராடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் தான் அஜித். ஆரம்பத்தில் ரொம்பவே இறங்கி போனவர். உச்சத்தில் இருக்கும் போது நிறைய சேட்டைகளை செய்தது உண்மை தானாம். அதை இன்று வரை செய்து வந்து இருக்கிறார் என்பது வேறு கூடுதல் தகவல்.

அஜித்தின் அடுத்த படமான ‘வலிமை’ படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. படக்குழு பல நாள்கள் தவம் இருந்து வரம் இருந்து விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு அக்டோபர் கடைசியில் தான் அஜித் வந்தார். அதில் அவ்வப்போது ரெஸ்ட்டும் எடுத்து கொண்டு இருக்கிறார். இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதி தான் முடிந்து இருக்கிறது. இன்னும் 50 சதவீதம் மிச்சம் இருக்கிறதாம்.

ADVERTISEMENT

அதனால் தயாரிப்பு தரப்பு கால்ஷூட் அதிகரிக்க கேட்ட போது கூட நோ நோ. பிப்ரவரியை தாண்டி ஒருநாள் தரமாட்டேன். முடிந்தவரை சீக்கிரம் முடிக்க சொல்லுங்கள் எனக் கறாராக கூறிவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அவரே லேட்டா வந்துட்டு இந்தா வாய் பேசுறாரேனு நினைக்க தொடங்கினர் ரசிகர்கள்.

இந்த கண்டிப்பு புதுசு இல்லையாம். இதற்கு முன்னரே இந்த வேலையை செஞ்சி இருக்காராம். ஒரு கட்டத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் நல்ல ரீச்சை கொடுத்து வசூல் தந்தது. அந்த சமயத்தில் சிட்டிசன் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்ததாம். அந்த படத்தினை இயக்கியவர் சரவண சுப்பையா.

இந்த படத்தின் ஷூட்டிங் மட்டுமே 100 நாட்களுக்கு நடந்தது. ரொம்ப பொறுமையாகவே எல்லா காட்சிகளையும் எடுத்து கொண்டு இருந்து இருக்கிறார் அஜித். கிட்டத்தட்ட படத்தின் எல்லா காட்சிகளும் முடிந்து கிளைமேக்ஸ் படமாக்கப்பட்டு வந்து இருக்கிறது. ஆனால் அதுவும் இழுத்து கொண்டே போனதாம்.

ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீறிய அஜித், சீக்கிரம் முடிக்கிறீயா இல்லை நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன். பூவெல்லாம் உன் வாசம் படத்துக்கு கால்ஷூட் கொடுத்துட்டேன். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்தோ வரேன் அந்தோ வரேனு நானும் எவ்வளோ தான் சமாளிக்கிறது என சத்தம் போட்டாராம். அப்புறம் தான் இயக்குனர் படத்தினை பரபரப்பாக எடுத்து முடித்தார் எனக் கூறப்படுகிறது.

அஜித்தின் இந்த கண்டிப்பு அவரது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ முறை நிகழ்ந்துள்ளது. அது தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என பலரும் கூறுகின்றனர். அவரது கண்டிப்பு காரணமாகவே பல படங்கள் திட்டமிட்ட நேரத்தில் முடிந்து வெளியாகியுள்ளன.

அஜித்தின் இந்த கண்டிப்பு ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும், அவரது வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT