தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான விஜயகாந்த், தனது ஆளுமை மற்றும் திறமையால் தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். பல புதிய இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மேலே தூக்கிவிட்டவர்.
விஜயகாந்த், தனது திரையுலக வாழ்க்கையில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். புலன் விசாரணை படத்தில் சரத்குமாருக்கு வில்லன் வேடம் கொடுத்து தூக்கிவிட்டார். அதே, சரத்குமாரை தனது சொந்த தயாரிப்பில் தாய்மொழி என்கிற படத்தில் ஹீரோவாக்கினார். அதேபோல்தான் மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் அறிமுகம் செய்து வைத்து தூக்கிவிட்டார்.
திரைப்படக்கல்லூரியை சேர்ந்த 47 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். விஜயின் படங்கள் ஓடாத போது அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். அதேபோல், சிவக்குமாரிடம் கொண்ட நட்புக்காக சூர்யாவை தனது பெரிய அண்ணன் படத்தில் நடிக்க வைத்தார். இப்படி அவர் வளர்த்துவிட்டவர்கள் ஏராளம்.
அதேபோல், நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டு அதன் கடனை அடைத்தார்.
ஆனால், சினிமா உலகுக்கு இவ்வளவு செய்த விஜயகாந்துக்கு சினிமா உலகம் எதையும் செய்தது இல்லை. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட சொற்பமான நடிகர்களே வந்தனர். பெரிய நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதியை தவிர யாரும் வரவில்லை.
புதுவருட கொண்டாட்டம் முடிந்த நிலையில் ஒவ்வொருவராக விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலில் கார்த்தி வந்தார். அதன்பின் சூர்யா வந்தார். சுர்யாவோ குலுங்கி குலுங்கி அழுதார்.
சென்னை மருந்துக்கடைகளில் க்ளிசரின் வியாபாரம் அதிகரிப்பு? pic.twitter.com/h1dTNc3RDP
— Blue Sattai Maran (@tamiltalkies) January 5, 2024
இந்த நடிகர்கள் தங்கள் உண்மையான அனுதாபத்தை வெளிப்படுத்துவதாகக் கூறினாலும், பலரும் அவர்களை நம்பவில்லை. புளூசட்ட மாறன் போன்ற சிலர், இந்த நடிகர்கள் வெறும் நாடகமாடுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தனர்.
சென்னையில் உள்ள மருந்து கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரித்துள்ளது. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பர்பாமன்ஸ் என மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும், பாண்டிச்சேரியில் இருந்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றும், ஜாலியாக புதுவருடத்தை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு இப்போது வந்து வருத்தப்படுவது போல நடிகர்கள் நடிக்கிறார்கள்’ என்பது போல மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவு, தமிழ் சினிமாவின் ஒரு இழப்பு. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சினிமா உலகம் உண்மையான அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
Waiting for next performer. pic.twitter.com/7eniXmocXY
— Blue Sattai Maran (@tamiltalkies) January 5, 2024
