நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இன்று (ஜனவரி 7) முதல் அசர்பைஜானில் மீண்டும் துவங்குகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடத்தப்பட்டு வந்தது. முதல் கட்டமாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஷெட்யூலில் அஜித், அர்ஜூன் பங்கேற்ற கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டனர். அஜித் லண்டன் சென்று தனது மகள் அனொஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் இன்று முதல் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக துவங்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜூன் என்றும், திரிஷாவின் கேரக்டர் பெயர் கயல் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முற்றிலும் வெளிநாட்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுவரும் சூழலில் மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படம் அஜித் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
