Wednesday, October 28, 2026

பிரபல நடிக்கிடம் டேட்டிங் செய்யும் நாகசைதன்யா!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் நடிகர்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா. இந்த ஜோடி கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த ஜோடி கடந்த 2021-ம் ஆண்டிலேயே தங்களது பிரிவை அறிவித்தனர்.

இவர்களது பிரிவுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நாக சைதன்யாவுடனான பிரிவால் சமந்தா மிகவும் கஷ்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதன் பிறகு சினிமாவில் தீவிரமாகக் கவனம் செலுத்தத் தொடங்கினார் சமந்தா. அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் ஆதரவு கொடுத்தனர். இப்போது சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த வருடம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

இதற்கிடையில்தான் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதாவும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பியது. ஆனால், இதுகுறித்து இருவரும் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இந்நிலையில், ஷோபிதா இந்த விவகாரத்தில் முதன்முறையாக தனது பதிலைத் தெரிவித்துள்ளார்.

“உண்மை என்ன என்று தெரியாமல் பேசுபவர்களுக்கும், தெரியாத தகவல்களை எழுதுபவர்களுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத போது அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் பதில் கொடுக்க வேண்டும். எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்!” என்று ஷோபிதா கூறியுள்ளார்.

ஷோபிதாவின் இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT