Wednesday, October 28, 2026

தளபதியின் GOAT First Look போஸ்டரை பார்த்து வெங்கட்பிரபுவிடம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூலில் சாதனை படைத்தது.

லியோ படம் உருவாகி வந்தபோது விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்து வருகின்றனர். படத்தை கல்பாத்தி அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 31-ஆம் தேதி வெளியானது. அதில், விஜய் டபுள் ஆக்ஷனில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், GOAT படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு கூறியதாவது:

“இளைய தளபதி போன்ற ஒரு ஹீரோவை ஏலியன்ஸ் கடத்திட்டு போய்ட்டா அங்க என்ன நடக்கும்” என்பது தான் தளபதி 68 படத்தின் லீட்.

இதன் மூலம் GOAT படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸ் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று வெங்கட்பிரபு கூறியிருந்தார்.

கதையில் வித்தியாசத்தை நுழைத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் வெங்கட் பிரபுவும், ஆக்ஷன்களில் அசத்தும் விஜய்யும் இணைந்து உருவாகும் GOAT படம் தமிழ் திரையுலகில் புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GOAT படத்தில் இரட்டை கேரக்டர்களில் நடிக்கும் விஜய்க்கு சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிக்கின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு புத்தாண்டு முன்னிட்டு அஜித்துக்கு போன் செய்துள்ளார் ஹாப்பி நியூ இயர் சொல்ல அஜித் shame டு யூ என கூறியதோடு மட்டும் இல்லாமல் அஜித் நான் GOAT படத்தின் First Look போஸ்டரை பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு மாநாடு படத்தை தொடர்ந்து இதுவும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என வெங்கட் பிரவை மெர்சல் பண்ணியுள்ளாராம் அஜித் அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயை நலம் விசாரித்தார் என்றும் கேட்டு அறிந்தாராம் அஜித் இந்த தகவல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT