Wednesday, October 28, 2026

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு கருதி பல்வேறு கட்டுப்பாடுகள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, நாளை (ஜனவரி 15) காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு இன்று (ஜனவரி 14) நள்ளிரவு 12 மணி முதல் அனுமதி வழங்கப்படும்.

ADVERTISEMENT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு, முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி. காளைகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள் அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்திக் கொள்ளலாம்.

ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் காளைகள், உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதிச்சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்று கொண்டுவரவேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்கக்கூடாது.

காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்காக கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிகட்டு நடைபெறும் பகுதியில் உள்ள வீட்டின் மாடிகளில் வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளி நபர்கள் வீட்டின் மாடியில் தங்க அனுமதி இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுக்கடைகளை மூட உத்தரவு: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 10 மதுக்கடைகளுக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 7 மதுக்கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம் நிறுத்தப்படும்: ஜல்லிக்கட்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக அவனியாபுரத்தில் நாளை(ஜனவரி 15) மட்டும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பெரியசாமி நகரில் 6, 7, 8வது தெரு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குப் பிள்ளை தெரு , யாதவர் தெரு , ஒட்ரமரசந்து, கலைஞர் தெரு, சங்கரநாராயணன் தெரு, திருப்பரங்குன்றம் மெயின் ரோடு , அவனியாபுரம் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை(ஜனவரி 15) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT