Wednesday, October 28, 2026

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேட் ஆவது யார் தெரியுமா ? ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற விஷ்ணு தவிர அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

நாமினேஷன் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் பூர்ணிமா, மாயா, விஜய் வர்மா, அசீம், கதிரவன் ஆகியோர் உள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற வாக்குப்பதிவின் முடிவின்படி மிகவும் குறைவான வாக்குகளை பூர்ணிமா பெற்றிருப்பதாக தெரிவதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல யோசித்துக் கொண்டிருப்பதால் எலிமினேசனுக்கு முன்பே அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றால் மாயாவுக்கு தான் சிக்கல் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பூர்ணிமாவை அடுத்து மாயா தான் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறார். பூர்ணிமா பணத்தை எடுக்காமல் இருந்தால் அவர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்றும் ஒருவேளை புத்திசாலித்தனமாக பணத்தை எடுத்து விட்டால் மாயா எலிமினேஷன் செய்ய செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

ஒருவேளை இந்த வாரம் டபுள் எவிக்சனாக இருந்தால் மாயாவுக்கு அடுத்தபடியாக குறைந்த வாக்குகள் பெற்றுள்ள விஜய் வர்மாவும் எலிமினேட் செய்யப்படுவார். மொத்தத்தில் இந்த வாரம் எலிமினேஷன் பகுதி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூர்ணிமா எலிமினேட் ஆகும் வாய்ப்பு அதிகம்

பூர்ணிமா சமீபகாலமாக பிக் பாஸ் வீட்டில் அதிக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, அசீம், மாயா ஆகியோருடன் ஏற்பட்ட சண்டைகள் அவருக்கு எதிராக மக்களின் கருத்தை மாற்றியுள்ளதாக தெரிகிறது.

அத்துடன், பூர்ணிமா கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் பணப்பெட்டியை எடுக்காமல் இருந்தார். இதனால், அவர் மீது மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், பூர்ணிமா இந்த வாரம் எலிமினேட் ஆகும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT