Wednesday, October 28, 2026

அஜித் சாரின் விடாமுயற்சி படத்திற்கு நான் வெயிட்டிங் ! சிவகார்த்திகேயன் ஒரே போடு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் ஜேபிஆர் பீச்சில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் ப்ரித்திசிங் மற்றும் இயக்குனர் ரவிகுமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழா சென்னையில் மட்டுமே நடந்த நிலையில், சமீபகாலமாக சில படங்களின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடந்து வருகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்போது ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அயலான் படத்தின் டிரைலர் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயலான் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இவ்வளவு பெரிய வியாபாரம் நடந்ததில்லை என சொல்லப்படுகிறது.

இதை அடுத்து அஜித்தை பார்த்திங்களா சமீபத்தில் என்று தொகுப்பாளர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன் எஸ் போன வருடம் பார்த்தேன் ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு விடாமுயற்சி படத்தின் கதை எனக்கு தெரியும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருப்பு வீனா போகாது என்றும் நானும் விடாமுயற்சி படத்திற்கு வெயிட்டிங் என அவர் கூறினாராம் இந்த தகவல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT