பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 96 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு வாரத்தில் இறுதி நிலையை எட்டவுள்ளது. இந்நிலையில் தற்போது டபுள் எவிக்ஷனில் விசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இறுதியாக 16 லட்சம் பணத்துடன் பூர்ணிமா வெளியேறி இருந்தார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகாமல் நேரடியாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று விஷ்ணு இறுதி வாரத்துக்குள் நுழைந்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆன அர்ச்சனா, மணி, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா மற்றும் மாயா ஆகியோரில் யார் இம்முறை வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதுள்ள ஆறு பேரில் கிராண்ட் பினாலே வாரத்துக்குள் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், போட்டியாளராக பங்கு பற்றிய விசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்ற அதிகாரபூர்வனமான அறிவிப்பு கிடைத்துள்ளது.
விசித்ரா கடந்த சில வாரங்களாக வீட்டில் அதிகம் பேசப்படாத போட்டியாளராக இருந்தார். அவர் வீட்டில் உள்ளவர்களுடன் அதிகம் பழகாமல் தனியாகவே இருந்தார். இதனால், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிட்டது.
இந்த நிலையில், விசித்ரா டபுள் எவிக்ஷனில் வெளியேறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
