பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, தன் ஆபிஸுக்கு வரும் பழைய நடிகர்களை அசிங்கமாக திட்டுவதாக, நடிகர் பாவா லட்சுமணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய ஒரு பேட்டியில், பாவா லட்சுமணன் தனது வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்களைப் பற்றி பேசினார். அப்போது, வடிவேலுவுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், என்னை உட்பட பல பழைய நடிகர்களை யாரையும் கூப்பிடவில்லை,” என்று பாவா லட்சுமணன் கூறினார். “இதை பற்றி ஒரு பேட்டியில், வடிவேலு ‘பழைய ஆட்கள் யாரையும் கூப்பிடல, கட் பண்ணிட்டேன், புது ஆள் போட்ருக்கேன்’ என்று கூறியிருந்தார்.”
“அந்த நேரத்தில் நாங்கள் ஏதாவது சொன்னால் கேட்பார். ஆனால் இப்போது, புதிய நடிகர்கள் எதுத்து பேசுகிறார்கள். நாங்கள் வாங்கிய சம்பளத்தை கூட அவர்கள் வாங்குவதில்லை. அவர்கள் 20,000 – 25,000 ரூபாய் வாங்குகிறார்கள். நாங்கள் இதுவரை வெறும் 5,000 ரூபாய் தான் வாங்கியிருக்கிறோம்.”
“அவரது ஆபிஸுக்கு சென்றால், ‘இங்கெல்லாம் வராதீர்கள்’ என்று அசிங்கமாக திட்டுவார்,” என்று பாவா லட்சுமணன் வருத்தத்துடன் கூறினார். “நாய் சேகர் படத்தில் என்னை நடிக்க கூப்பிடுவதாக சொன்னார், ஆனால் கூப்பிடவே இல்லை. நானும் அதை விட்டுவிட்டேன்.”
பாவா லட்சுமணனின் இந்த குற்றச்சாட்டு, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு இதுவரை இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
