தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிரண். சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் விரும்பும் சிகரெட்டின் விலையைப் பற்றி பேசியுள்ளார். அது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எனக்கு பிடித்தமான சிகரெட் கிளாசிக் மெந்தோல். அதன் விலை ரூ.342,” என்று கிரண் கூறியுள்ளார்.
இந்த தகவல் வெளியானதும், நெட்டிசன்கள் பலரும் சிகரெட்டின் அதிக விலை குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“என்னது, இவ்வளவு விலைக்கு சிகரெட்டா?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பணம் இருந்தால் எதையும் வாங்கலாம்,” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சிலர், கிரண் புகைப்பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு பழக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
