Wednesday, October 28, 2026

கொய்யா சுவையான பழம், ஆரோக்கியமான நன்மைகள்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் கொய்யா பழம், சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தினமும் கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்:

மலச்சிக்கலுக்கு தீர்வு:

ADVERTISEMENT

தினமும் இரண்டு கொய்யா பழங்கள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்கும் பலத்தையும் சேர்க்கும்.

பற்கள், ஈறுகளுக்கு வலு:

கொய்யாவின் தோலில் அதிக சத்துகள் உள்ளன. எனவே தோலுடன் சேர்த்து சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

ரத்தத்திற்கு நன்மை:

கொய்யா பழம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்:

கொய்யா பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு:

கொய்யா பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மூல நோய்க்கு தீர்வு:

மூல நோய் உள்ளவர்களுக்கு கொய்யா பழம் சாப்பிடுவது நல்லது.

பிற நன்மைகள்:

சருமத்திற்கு பொலிவு தரும்
தோல் வறட்சியை நீக்கும்
தோல் சுருக்கத்தைக் குறைக்கும்
ஸ்கர்வி நோயை தடுக்கும்
குறிப்பு:

கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.
உணவு உண்ட பின் அல்லது உணவு உண்பதற்கு நீண்ட நேரத்திற்கு முன் சாப்பிடலாம்.
கொய்யா பழம் – ஒரு அற்புதமான இயற்கை உணவு!

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT