காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்க, சுக்கிரன் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த காதல் கிரகங்களின் கூட்டணி தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்குகிறது.
தனுசு:
உங்கள் ராசிக்கு அதிபதி குரு, தன ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெற்று பயணம் செய்கிறார்.
சுக்கிரனால் தன யோகம் வரும், பண வருமானம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் திருமணம், சுப காரியங்கள் நடைபெறும்.
கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
காதல் துணையுடனான உறவுகள் இனிக்கும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும்.
காதல் துணைக்கு அன்பான பரிசுகளை அள்ளித்தருவீர்கள்.
மகரம்:
உங்கள் ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற செவ்வாய் உடன் இணைந்துள்ளார்.
சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
முகத்தில் பொலிவு ஏற்படும்.
வாழ்க்கை துணையை பரிசுகளால் திணறடிப்பீர்கள்.
பொருளும் சேரும் நேரம் இது.
தங்க நகைகள் வாங்கலாம்.
கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
கும்பம்:
சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு யோகாதிபதி.
குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும்.
மனம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடும்.
சுப விரைய செலவு ஏற்படும்.
குடும்பத்தில் கசப்புணர்வுகள் மறைந்து கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.
வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும்.
பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள்.
அன்பான பரிசுகளால் அசரடிப்பீர்கள்.
மீனம்:
சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு முயற்சி ஸ்தான அதிபதி.
லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் அமர்ந்து உள்ளார்.
குடும்பம், திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள்.
அன்பான வாழ்க்கை துணையால் மனம் மகிழ்ச்சியடையும்.
பண வருமானம் அதிகரிக்கும்.
செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் காதலோடு உற்சாகமாக இருப்பீர்கள்.
