பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படம், ஐந்தாவது நாளிலேயே வசூலில் திணறி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய் தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த போதிலும், படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், இது ரஜினிகாந்த படம் தான் என்று விளம்பரங்கள் வந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.
ஆனால், வசூலில் படம் சொதப்பியுள்ளது.
முதல் நாள்: ரூ.3.55 கோடி
இரண்டாவது நாள்: ரூ.3.25 கோடி
மூன்றாவது நாள்: ரூ.3.10 கோடி
நான்காவது நாள்: ரூ.1.25 கோடி
ஐந்தாவது நாள்: ரூ.1 கோடி
மொத்த வசூல்: ரூ.11.13 கோடி
படத்தின் பட்ஜெட்: ரூ.40 கோடி
ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லால் சலாம் முறியடிக்க முடியவில்லை.
