Wednesday, October 28, 2026

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சினிமா பிரபலங்கள் பங்கேற்பு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில், உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘மிஷன்’ படத்தின் நடிகர் அருண் விஜய் வந்தார். படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது கை மற்றும் வலது காலில் கட்டு போடப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

அதையும் பொருட்படுத்தாது நடிகர் அருண் விஜய் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். தொடர்ந்து, மிஷன் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜயும் வருகை பிரிந்து கண்டுகளித்தார்.

நடிகர் அருண் விஜய் அளித்த பேட்டியில், “தமிழர்களின் வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக வந்து பார்க்கிறேன். மாடுபிடி வீரரை போல ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தமிழரின் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும். மிஷன் படத்தின் ப்ரமோசனுக்காக மதுரை வந்த இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட்டு வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா, நானா நிகழ்ச்சியின் பிரபல தொகுப்பாளர் கோபியும் தனது மகளுடன் பார்வையிட்டு வருகிறார்.

இந்த விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), தமிழரசி (மானாமதுரை) அவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் வந்துள்ளன.

இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாகவும், 2ஆவது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முடிவில் 3ஆவது பரிசு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று விழா கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT