Wednesday, October 28, 2026

ஒரு பயலும் வாங்கல ! போனி ஆகாமல் இருக்கும் படம் தளபதி விஜய்யின் “The GOAT” படம் ! கவலையில் விஜய்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் ஆடியோ உரிமை தவிர வேறு எந்த உரிமையும் இன்னும் விற்பனை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் படத்தின் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய தொகையை விலையாக நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் பிஸ்னஸ் இன்னும் தொடங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், விநியோகஸ்தர்கள் அந்த தொகையை கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் எப்படி முடிவடையும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT