பொதுவாக ஜலதோஷம், இரும்பல், சளி, தலைவலி, உடல் அசதி போன்றவற்றை குணப்படுத்த ஆவி பிடிப்பது வழக்கம். ஆனால் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகள் பலருக்கு தெரியாது.
முக அழுக்குகளை நீக்குகிறது: 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் போன்ற அழுக்குகள் விரைவில் வெளியேறும். இதனால் முகம் பளிச்சென்று மாறும்.
முகப்பருக்களை குறைக்கிறது: ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் இயற்கையாகவே சுரந்து சருமம் பொலிவாக இருக்கும். இதனால் முகப்பருக்கள் குறையும்.
முதுமை தோற்றத்தை தடுக்கிறது: ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும். இதனால் முகம் இளமையாக தோற்றமளிக்கும்.
முகத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: ஆவி பிடிப்பதால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் பளிச்சென்று காணப்படும்.
தோள்பட்டை வலியை குறைக்கிறது: ஆவி பிடிப்பதால் தோள்பட்டை வலி, கழுத்து வலி போன்றவை குறையும்.
பொதுவாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆவி பிடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.
குறிப்பு:
முகப்பருக்கள் இருக்கும்போது 4 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே ஆவி பிடிக்க வேண்டும்.
ஆவி பிடித்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவக்கூடாது.
ஆவி பிடிக்கும் போது தலையில் துண்டு போட்டு கொள்ள வேண்டும்.
