Wednesday, October 28, 2026

கைவிட்ட அஜித் ! தட்டி தூக்கிய ஜெயம் ரவி பரபரப்பு பின்னணி தகவல் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர், அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சேது, நந்தா ஆகிய படங்களில் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அமீர், 2002ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை புதுவிதமாக காண்பித்து காதல் ஜானரில் அந்தப் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் அமீர்.

ADVERTISEMENT

அதனையடுத்து அவர் இயக்கிய ராம் படத்தின் மூலம் அவரே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை.

மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார். கார்த்தியின் முதல் படமான அது இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. கார்த்தியுடன் ப்ரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகி ப்ரியாமணிக்கு தேசிய விருதையும் கார்த்திக்கு சிறந்த அறிமுகத்தையும் பெற்று கொடுத்தது.

அமீர் தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னையில் அவர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர். மேலும் அவரே தயாரித்து நடித்திருக்கும் மாயவலை படமும் ரிலீஸாகவிருக்கிறது. அதன் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அமீர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மௌனம் பேசியதே படத்தில் விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்போது அவரது வியாபாரம் வேறு மாதிரி இருந்தது. அதேபோல் அவர் புதுமுக இயக்குநருடன் பயணிக்க விரும்பினாரா என்றும் தெரியவில்லை.

அதேபோல் ஆதிபகவான் படத்துக்கு பெஸ்ட் சாய்ஸ் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் அவரால்தான் மாஸாகவும் செய்ய முடியும்; நளினமாகவும் செய்ய முடியும். விஜய்யை அதில் பொருத்திப்பார்க்கவே முடியாது. ஆனால் அந்தப் பட சமயத்தில் அஜித்தை அப்ரோச் செய்யும் இடத்தில் நான் இல்லை” என்றார்.

அமீரின் இந்த பேட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மற்றும் அஜித் இருவரையும் ஒருவர் மீது ஒருவர் கைகூப்பி வணங்கும் அளவுக்கு மதிப்பது அமீருக்குத்தான் உண்டு. அவரது இந்த பேட்டி இரண்டு முன்னணி நடிகர்களுக்கும் ஒரு வகையில் பாராட்டுதான்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT