Wednesday, October 28, 2026

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. இதையடுத்து அதிமுக ஆர்.கே.நகர் நிர்வாகி நித்தியானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு காவல்துறை மறுத்துவிட்டனர். இதனால் திலகர் நகர் பகுதியில் நடந்த அனுமதி கேட்கப்பட்டது அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இது போன்ற நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதி, “இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் தண்டையார்பேட்டையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, ஜனவரி 19ஆம் தேதி அன்று தண்டையார்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT