தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, துவார்கா புரொடக்ஷன்ஸ் பிளேஸ் கண்ணன் – ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கின்றனர். இப்படத்தை இயக்குநர் ரா.சவரி முத்து இயக்குகிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக இந்த படம் அமைக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
