Wednesday, October 28, 2026

உலகநாயகனிடம் இருந்து வந்த வந்த போன் கால்! தலைவர் செய்த வேலை!.. ஆடிப்போன பிரபலம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இருவரும் தங்கள் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

ரஜினிகாந்த் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன் ஹீரோவாக நடித்தார். அதாவது, ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கமல்ஹாசன் ஒரு ஹீரோ. சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். நடிப்பு கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தபோதே கமலின் படங்களை விரும்பி பார்ப்பவர் ரஜினி.

ADVERTISEMENT

இயக்குனர் பாலச்சந்தரை ரஜினிக்கு பிடிக்கும் என்பதால் கமலும் பிடித்துப்போனார். அபூர்வ ராகங்கள் படத்திற்க்கு பின் பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சி, அவர்கள், நினைத்தாலே இனிக்கும், ஆடு புலி ஆட்டம் என தொடர்ந்து கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினி.

ஆனால், இனிமேல் நாம் இருவரும் தனித்தனியாக நடிப்போம் என கமல் சொன்னதை கேட்டு அப்படியே நடிக்க துவங்கினார் ரஜினி. ஒருகட்டத்தில் கமலையே ஓவர் டேக் செய்து சூப்பர்ஸ்டாராகவும் ரஜினி மாறினார். கமல்ஹாசன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஒரு ரூட்டில் போனால் ரஜினியோ மசாலா படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோவாக மாறினார்.

தனது போட்டி நடிகர் என்றாலும் கமல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் எப்போதும் வைத்திருப்பவர் ரஜினி.இதை பல பேட்டிகள் மற்றும் மேடைகளில் அவரது பேச்சுகளால் தெரிந்துகொள்ளலாம். ரஜினிக்கு இப்போதும் ஏதோ ஒன்று சரியாக பிடிபடவில்லை எனில் அவர் முதலில் பேசுவது கமலிடம்தான். இப்போது கூட எங்கேயாவது கமலை பற்றி பேசும் சூழ்நிலை வந்தால் மிகவும் மரியாதையாக பேசுவார்.

இந்த அன்பும் மரியாதையும் ரஜினிகாந்தின் செயல்களில் வெளிப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த “கோச்சடையான்” படத்தை பார்க்க ரஜினிகாந்த் அழைத்திருந்தார். ஆனால், கமல் அந்த படம் பார்க்கப்போன போது ரஜினிகாந்த் லிங்கா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். உடனே கமல்ஹாசன் ரஜினிகாந்துக்கு போன் செய்தார்.

இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட நடிகர் இளவரசு, “லிங்கா படத்தில் ரஜினி சார் உடன் நடித்தேன். ரஜினி சார் கால் மேல் கால் போட்டு பாட்ஷா பட ஸ்டைலில் அமர்ந்திருந்தார். அப்போது கமல் சார் போன் செய்தார். கமல் சார் போனில் இருக்கிறார் என உதவியாளர் சொன்னதும் காலை கீழே இறக்கிவிட்டார். ‘நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.. நீங்கள் படம் பாருங்கள்.. தேங்க் யூ’ என சொல்லிவிட்டு போனை கட் செய்த பின்னரே மீண்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

ரஜினி சார் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை கமல் சார் பார்க்க போவதில்லை. எல்லோர் முன்னைலையிலும் அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் ரஜினி சார்க்கு இல்லை. இப்படி எந்த நடிகரும் இருக்க மாட்டார்” என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் ரஜினிகாந்தின் கமல்ஹாசன் மீதான அன்பும் மரியாதையும் வெளிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT