நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மதுவுக்கு அடிமையாக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது குறித்து சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், “ஸ்ருதி ஹாசன் ஒரு நடிகை இப்படி சொல்வதற்கு தைரியம் வேண்டும். ரஜினிக்ககூட தனது 72வயதுக்கு மேல்தான் குடிப்பழக்கம் இருந்தது அதில் இருந்து மீண்டு வந்தேன் என்று சொல்லி இருந்தார். ஆனால், ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் உறவில் இருப்பதையே வெளிப்படையாக சொல்லக்கூடியவராக இருப்பதால், எனக்கு குடிப்பழக்கம் இருந்தது என்பதை தைரியமாக சொல்லி இருக்கிறார்.
இந்த தைரியத்திற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் தான். அவர் எப்போதுமே தனது இரண்டு மகள்களையும் ஆண் பிள்ளைகள் போலத்தான் வளர்ந்து இருக்கிறேன் என்று கூறுவார். அதே போலத்தான், ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷராக ஹாசன் என இரண்டு பேருமே மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகி விட்டார்கள். உண்மையில் கமல் தனது மகளை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் உருவாக்கி இருக்கிறார்.
கமல்ஹாசனின் குணம் ஸ்ருதி ஹாசனுக்கு ஊட்டியாக இருக்கிறது. அவர் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு நோ கமெண்ட்ஸ் பதிலே சொல்லமாட்டார். அனைத்து கேள்விக்கும் தடாலடி பதில் கொடுத்துவிட்டு போய் கொண்டே இருப்பார். அவரிடம் மழுப்பலான பதிலே இருக்காது. அவரின் இந்த குணம் பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதே போலத்தான் ஸ்ருதி ஹாசனும் அப்பாவுக்கு தப்பாமல், நான் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன், குடிப்பழக்கம் எனக்கு இருந்தது என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். நான் இப்படித்தான், நான் எப்படிப்பட்டவள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியவேண்டும் என்பதில் ஸ்ருதி உறுதியாக இருக்கிறாள்.
அதேபோலத்தான் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டு நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்டு ஓடிபோனார்கள். ஆனால், ஸ்ருதி ஹாசன் மட்டும் நான் நடிக்கிறேன் என்று முன் வந்தார். இதை பாலகிருஷ்ணாவே பேட்டி ஒன்றில் பெருமையாக பேசி இருந்தார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்…. என்ன கிசு கிசு வேண்டுமானாலும் வரட்டும் நான் இப்படித்தான் என்பதில் ஸ்ருதி ஹாசன் தெளிவாக இருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனின் இந்த தைரியமான வெளிப்பாடு தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையாக அமையும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம், பல இளம் நடிகைகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
