Wednesday, October 28, 2026

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்கான முக்கிய காரணமே இதுதான் செந்தில் கூறிய உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்கான காரணம் குறித்து நடிகர் செந்தில் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுகுறித்து அவர் பேசுகையில், “தன்னுடைய மகள் இயக்கும் படம் என்பதால் மட்டும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிகக்வில்லை. அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் கதை ரஜினிகாந்த்துக்கு பிடித்திருக்க வேண்டும். நிறைய பேருக்கு கதை பிடிக்கும் என்று அவருக்கு தோன்ற வேண்டும். அப்போதுதான் நடிப்பார்.

ADVERTISEMENT

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலிலிதான் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடிக்க வேண்டும் என்றாலும் அவரது கதாபாத்திரம் மற்றும் கதை சிறப்பாக அமைந்தால் மட்டும்தான் அவர் நடிப்பார்.

ராகேவேந்திரா மண்டபத்தில் ஒருமுறை ரஜினிகாந்த்தை சந்தித்தேன். அப்போது நீங்கள் என்னை வைத்து ஒரு படம் தயாரியுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் நான் தயாரிக்கவில்லை. அப்படி அவரை வைத்து தயாரித்திருந்தால் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். எப்போதும் நான் பணத்துக்கு ஆசைப்படுபவன் இல்லை. இருந்தாலும் ரஜினி சொல்லி அதை தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தம் இப்போதும் எனக்குள் இருக்கிறது” என்றார்.

செந்தில் கூறியது உண்மைதான். ரஜினிகாந்த் ஒருபோதும் மற்றவர்கள் அழுத்துவதால் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக படங்களில் நடிப்பதில்லை. ஒரு படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தால், அந்தப் படத்தில் நடிப்பார்.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT