Wednesday, October 28, 2026

சிவகார்த்திகேயன் தனுஷின் லைஃப் டைம் வசூலே இவ்ளோ வராது!.. முதல் நாளிலேயே கெத்துக் காட்டிய மகேஷ் பாபு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமாவுக்கு படுதோல்வியாக அமைந்துள்ளது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் 50 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பட்சமாக 50 முதல் 80 கோடி வசூல் வரை இரண்டு படங்களும் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், இரண்டு படங்களின் லைஃப் டைம் வசூலை முதல் நாளிலேயே தெலுங்கு படமான குண்டூர் காரம் முறியடித்துள்ளது.

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி உள்ளது. தெலுங்கில் அதற்கு போட்டி இளம் நடிகர் தேஜா நடிப்பில் வெளியான ஹனுமான் மட்டும் தான். ஆனால், மகேஷ் பாபுவின் மாஸ் ஆடியன்ஸுக்கு முன்னாடி அந்த படம் எல்லாம் பெரிதாக நிற்காது என்றே கூறுகின்றனர்.

ADVERTISEMENT

அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அதே போல ஒரு குடும்ப மாஸ் மசாலா கதையை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மற்றொரு ஹீரோயினாக மீனாக்‌ஷி செளத்ரியும் நடித்துள்ளார். விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் இந்த மீனாக்‌ஷி தான் ஹீரோயின்.

முதல் நாளில் குண்டூர் காரம் படம் அதிகாரப்பூர்வமாக 94 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் லைஃப் டைம் வசூலே இந்த அளவுக்கு வருமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் தோல்விக்கு காரணங்கள் என்ன?

தமிழ் சினிமாவுக்கு பொங்கல் பண்டிகை வசூல் பெரியளவில் இருக்கவில்லை என்றாலும், இந்த ஆண்டு அது படுதோல்வியாக அமைந்ததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

தமிழ் படங்களின் கதை மற்றும் திரைக்கதை: பொங்கல் பண்டிகைக்காக வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றே கூறலாம். கேப்டன் மில்லர் படம் ஒரு காமெடி அதிரடி படமாக இருந்தாலும், அதில் காமெடி சரியில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அயலான் படம் ஒரு விஞ்ஞான புனைகதை படம் என்றாலும், அதில் கதை நன்றாக சொல்லப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழ் படங்களின் விளம்பரங்கள்: பொங்கல் பண்டிகைக்காக வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களின் விளம்பரங்கள் சிறப்பாக இல்லை என்றே கூறலாம். படத்தின் கதை மற்றும் திரைக்கதை பற்றிய சரியான தகவல்கள் ரசிகர்களுக்குத் தெரியவில்லை. இதனால், ரசிகர்கள் படங்களைப் பார்க்க ஈர்க்கப்படவில்லை.
தமிழ் சினிமாவின் போட்டி: தெலுங்கு சினிமாவின் வளர்ச்சி காரணமாக தமிழ் சினிமாவுக்கு போட்டி அதிகரித்துள்ளது. தெலுங்கு படங்களின் தரமான கதை மற்றும் திரைக்கதைகள் தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. இதனால், தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது.
இந்த காரணங்களால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமாவுக்கு படுதோல்வியாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT