Wednesday, October 28, 2026

மிளகுப் பாலின் ஆரோக்கிய பொருட்கள் மற்றும் அதன் பயன்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

இந்திய சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டுள்ளன. அதில் காரத்தன்மை கொண்ட ஒரு மசாலா பொருள் தான் மிளகு.

இந்த மிளகு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான மிளகு விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், நார்ச்ச்தது, மாங்கனீசு போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன.

ADVERTISEMENT

நம் முன்னோர்கள் மிளகை சளி, இருமல் பிடித்திருக்கும் வேளைகளில் அதிகம் பயன்படுத்துவார்கள். இது தவிர மிளகு உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இப்படிப்பட்ட மிளகை பொடி செய்து, வெதுவெதுப்பான பாலுடன் கலந்து குடித்து வந்தால், உடலில் பல்வேறு அற்புதங்கள் நிகழும் என்பது தெரியுமா?

உடல் எடை குறையும்

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் மிளகு பாலைக் குடித்து வருவது நல்லது. மிளகு விதைகளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலின் மெட்டபாலிசம் சிறப்பான அளவில் இருந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் உடல் எடையைக் குறைக்க மிளகு பாலைக் குடிக்க ந

ினைத்தால், கொழுப்பு குறைவான பாலில் மிளகுத் தூளை கலந்து குடிக்க வேண்டும்.

செரிமானம் சீராகும்

செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு மிளகு பால் மிகவும் நல்லது. ஏனெனில் மிளகுப் பால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு காரணம் மிளகில் உள்ள நார்ச்சத்து தான். ஆகவே அஜீரண பிரச்சனைகளை கொண்டவர்கள் தினமும் மிளகு பாலைக் குடித்து வந்தால், செரிமானம் சீராகும்.

சளி, இருமல் சரியாகும்

தற்போது காலநிலை அவ்வப்போது மாறுவதால், சளி, இருமல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் மிளகுப் பாலை குடித்து வந்தால், சுவாசப் பாதையில் உள்ள சளி இளகி வெளியேறி, விரைவில் சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகள் வலுவடையும்

பால் குடித்தால் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் பாலுடன் மிளகுத் தூளை கலந்து குடித்து வந்தால், அது எலும்புகளை வலுவாக்க உதவி புரியும். குறிப்பாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மிளகு பாலை குடித்து வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணத்தைப் பெறலாம்.

உடல் பலவீனம்

நீங்கள் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? பலவீனமாக இருக்கும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள நினைத்தால், மிளகுத் தூள் கலந்த பாலைக் குடியுங்கள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT