தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர் பிரியங்கா நல்காரி. சன்டிவியில் ஒளிபரப்பான “ரோஜா” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பல குடும்பங்களில் நடக்கும் மாமியார்-ம மருமகள் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த சீரியலில், மருமகளாக பிரியங்கா நல்காரி அசத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஜீ தமிழ் சேனலில் “சீதாராமன்” மற்றும் “நளதமயந்தி” ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், மேக்கப் இல்லாமல் படுக்கை அறையில் எடுத்த தனது புகைப்படங்களை பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். புடவையில் இருக்கும் அவரது இயல்பான அழகை பார்த்த ரசிகர்கள், சொக்கிப் போய்விட்டனர்.


“மேக்கப் இல்லாமல் கூட இப்படி அழகாக இருக்கிறாரே”, “இந்த பெண்ணுக்கு எந்த மேக்கப்பும் தேவையில்லை”, “அசத்தும் அழகு” போன்ற கமெண்டுகளுடன் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


பிரியங்கா நல்காரியின் இந்த புகைப்படங்கள், சின்னத்திரை நடிகைகள் மேக்கப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை உணர்த்துகின்றன.

