Wednesday, October 28, 2026

மக்கள் நீதி மய்யம்: கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஆப்பிரிக்காவில் படகு விபத்து 58 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எம்போகோ ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

லாரி ஸ்டிரைக்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக...

அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

முன்னாள் அமைச்சரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக...

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் மரணம்

சென்னை, ஏப்ரல் 6: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல்நலக்...
ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது. கூட்டத்துக்கு கமல் ஹாசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மக்களவைத் தேர்தல், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தல்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும், மக்களவைத் தேர்தல் கூட்டணி, கட்சி வளர்ச்சி குறித்தும் கமல் ஹாசன் ஆலோசனை வழங்கினார்.

அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து, பல்வேறு கட்சிகள் பேசி வருவதாகவும், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் நிர்வாகிகளிடம் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி, கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக மநீம செயற்குழு கூட்டம் இன்று (ஜனவரி 24) ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT