தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்
சோழிங்கநல்லூர் அதிக வாக்காளர் தொகுதி
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந் தேதி முடிவடைகிறது. 18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே தொடங்கி உள்ளன. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி 2-வது இடத்திலும் உள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதி – 6,60,419 வாக்காளர்கள். கோவை கவுண்டம்பாளையம் – 4,62,612 வாக்காளர்கள்
கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். மேலும், 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
மொத்த வாக்காளர்கள்: 6,18,90,034
பெண் வாக்காளர்கள்: 3,14,85,724
ஆண் வாக்காளர்கள்:3,03,96,330
3-ம் பாலின வாக்காளர்கள்: 8,294
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4,32,805
18-19 வயது வாக்காளர்கள்: 5,26,205
தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அதிக வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது தேர்தலில் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
