Wednesday, October 28, 2026

ரட்சிதாவின் தினேஷை கண்டிக்கும் பதிவு – பிக்பாஸ் ஃபினாலே பாதிக்குமா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சின்னத்திரை நடிகை ரட்சிதா மற்றும் அவரது கணவர் நடிகர் தினேஷ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் ஒரு ஃபைனலிஸ்ட் போட்டியாளராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தி வருகிறார். தினேஷ் மீண்டும் ரட்சிதாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பிக்பாஸ் ஃபினாலே நெருங்குவதற்கு முன்னதாக ரட்சிதா ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கதவுக்கு வெளியே நல்லவனாக காட்டிக் கொள்பவரை கதவை சாத்திக் கொண்டு பார்த்தால்தான் அவரது உண்மையான முகம் தெரியும். அவர் ஒரு கல்ப்ரிட். பொய்யையே பேசுபவர். சுய நலம் பிடித்தவர்” என்று ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அது போலத்தான் தனது வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு ரட்சிதாவின் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தினேஷை பற்றி ரட்சிதா நேரடியாக கண்டிக்கும் விதத்தில் இந்த பதிவு வெளியாகியுள்ளது. இதனால், பிக்பாஸ் ஃபினாலேயில் தினேஷின் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

தினேஷின் ரசிகர்கள் இந்த பதிவை கண்டபிடித்து, ரட்சிதாவை கண்டிக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். “தினேஷை பற்றி உனக்கு என்ன தெரியும்? நீயே ஒரு கல்ப்ரிட். உன்னுடைய சுய நலத்திற்காகவே இந்த பதிவை வெளியிட்டிருக்கிறாய்” என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த பதிவு குறித்து ரட்சிதா இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை. தினேஷும் தனது பதிவில் எந்த பதிலும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த பதிவு பிக்பாஸ் ஃபினாலேயில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT