நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘கருடன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதையை எழுத, துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடிக்க, மலையாள நடிகர் உன்னி முகுந்தன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக தமிழகத்தில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிலையில், படம் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெளியீட்டால் சூரி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
