Tuesday, February 24, 2026

சூர்யா – ஜோதிகா விவாகரத்து பற்றி வெளியான திடுக்கிடும் உண்மை தகவல் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக சமீபத்தில் பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருவதாகவும், சூர்யா தனியாக சென்னையில் வசித்து வருவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த வதந்தி குறித்து ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “நான் இந்தி படங்களில் பிசியாகி இருப்பதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும் என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். நன்றாக படித்து வருகிறார்கள். நான் மும்பையிலும், பிள்ளைகள் சென்னையிலும் இருந்தால் அவர்களின் படிப்புக்கு சரிபட்டு வராது என்று அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறேன். தன் பட கமிட்மென்ட்டுகள் எல்லாம் முடிந்ததும் பிள்ளைகளுடன் சென்னைக்கு திரும்பிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்றனர். அங்கு எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து, இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருவரும் இன்னும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT