துணிவு படம் முடிந்து ஒரு வருஷம் ஆகியும் அஜித்தின் புதிய படம் இன்னமும் வெளியாகாமல் இருப்பது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவது அவர்களுக்கு ஆறுதலை கொடுத்து வருகிறது.

விடாமுயற்சி படத்திற்காக அஜித், திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட படக்குழு கடந்த 2 மாதங்களாக அசர் பைசான் நாட்டில் இருந்தார்கள். மணல் புயல், பனிப்பொழி என பல தடங்கள்களை தாண்டி படக்குழு அங்கே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பனிப்பொழிவு காரணமாக இனிமேல் சார்ஜாவில் எடுத்து கொள்ளலாம் என அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகின்றனர். முழு படத்தையும் அசர் பைசான் நாட்டிலேயே முடித்துவிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. பனிப்பொழிவால் தற்போது மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிவிட்டது.


விரைவில் துபாய்க்கு செல்லவிருக்கிறார்கள். இந்த படம் பற்றி அதிகாரபூர்வ அப்டேட் இதுவரை ஒன்று கூட வெளியாகவில்லை. ஆனால், அர்ஜூனை அஜித் எடுத்த புகைப்படமும், அஜித்தை மற்றவர்கள் எடுத்த புகைப்படமும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் பலருடனும் அஜித் கூலாக போஸ் கொடுத்து வருகிறார்.


அதுவும் ஸ்டைலான லுக்கில் அஜித் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் செம கிளாசாக இருக்கிறது. பெரும்பாலும், இப்படத்தில் நடித்து வரும் ஆரவ் அதிக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஒரு இடத்தில் அஜிர் அமர்ந்திருக்க வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவர் தெரிவதை ஆரவ் புகைப்படம் எடுத்திருக்கிறார்.


அதை பகிர்ந்து ‘இப்படி ஒரு அழகான ஒரு கணத்தை புகைப்படமாக எடுப்பேன் நான் கனவு கூட கண்டதில்லை. அது ஆரவ் எடுத்த புகைப்படம் என பெருமையாக சொல்வேன்’ என பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.


அஜித் ரசிகர்கள், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அஜித் இந்த படத்தில் தன்னுடைய அசத்தலான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பார் என நம்புகின்றனர்.


இந்நிலையில் அடுத்த மாதம் விடாமுயற்சி படத்தின் FIRSTLOOK வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது
