தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்தகட்டமாக படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ராஜஸ்தான் மற்றும் இஸ்தான்புல் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. மூன்று இடங்களிலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதன் பிறகு மீண்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இடங்கள் குறித்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
