Wednesday, October 28, 2026

இணையத்தில் வைரலாகும் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் அயலான்.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வந்திருக்கிறது. ஏலியனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி, வெளியாகி உள்ளது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற கொடூர உருவத்தில் இல்லாமல், குழந்தைகளை கவரும் வகையில் ஒரு குட்டி ஏலியனை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் ரவிக்குமார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் படம் உருவாக்கம், கிராபிக்ஸ் பணிகள், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

படத்தின் தொடக்க கட்டத்தில் சிவகார்த்திகேயனும், ரகுல் ப்ரீத் சிங்கும் எப்படி சந்திக்கிறார்கள், அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது என்பதை பற்றிய காட்சிகள் முதல், ஏலியனை கண்டுபிடிக்கும் காட்சிகள், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.

குறிப்பாக, ஏலியனை எப்படி உருவாக்கினார்கள், அதன் கிராபிக்ஸ் பணிகள் எப்படி நடந்தன என்பது போன்ற விஷயங்கள் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT