Wednesday, October 28, 2026

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்தப் படம் ஏப்ரல் 26-ல் வெளியாக இருக்கிறது. இதையடுத்து விஷால், ‘துப்பறிவாளன் 2’ படத்தைத் தானே இயக்கி நடிக்க இருக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து ஹிட்டான படம், ‘துப்பறிவாளன்’. 2017-ம்ஆண்டு வெளியான இதன் 2-ம் பாகம் சில வருடங்களுக்கு முன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். பின்னர் ‘துப்பறிவாளன் 2’படத்தைத் தானே இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 1-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காக விஷால் லண்டன் செல்கிறார்.

இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா சரண், யோகிபாபு, ராஜ்கிரண், பிரபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தப் படத்திலும் விஷால் தனது நடிப்பால் ரசிகர்களை மகிழ்விப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT