தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் வடசென்னை 2 பற்றி பேசியுள்ளார்.
“வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் கண்டிப்பாக வரும். அதற்காக என்று தனி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை உள்ளங்கள் கேட்கும்போது கண்டிப்பா அது நடக்கும். காத்திருங்கள்” என்று தனுஷ் கூறியுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை முதல் பாகம் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டாவது பாகம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த பிறகு வடசென்னை 2 படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை முதல் பாகம் 26 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
