Wednesday, October 28, 2026

விஜயகாந்த் சாரின் இறுதி நிகழ்வில் பங்கேற்காதது வாழ்நாள் துயரம் ! கண்ணீர் வடித்த கார்த்தி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கார்த்தி: கேப்டன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும்

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

விஜயகாந்த் மறைவையொட்டி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “கேப்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளாமல் போனது, என் வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும். கேப்டன் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.

மேலும், “நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும் போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதராக கேப்டன் திகழ்ந்தார். அவரது மறைவால் தமிழ் திரையுலகம் பேரிழப்பைச் சந்தித்துள்ளது” என்று கார்த்தி தெரிவித்தார்.

இரங்கல் கூட்டம் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செயலாளர் சிவகுமார் ஆகியோர் கூட்டம் நடத்தி முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT