தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விஜய்-அஜித் மோதல் பொங்கல் 2023-ல் நிகழ்ந்தது. இந்த மோதலில் ரசிகர்கள் இருவரையும் வெற்றிபெற வாழ்த்தினர். ஆனால், உண்மையான வெற்றி யாருக்கு கிடைத்தது?
வசூல் ரீதியாக பார்த்தால், விஜய்யின் வாரிசு படம் ரூ.295 கோடியும், அஜித்தின் துணிவு படம் ரூ.225 கோடியும் வசூலித்துள்ளன. எனவே, வசூலில் வாரிசு படம் வெற்றி பெற்றது என்று கூறலாம்.
ஆனால், லாபம் ரீதியாக பார்த்தால், துணிவு படம் வெற்றி பெற்றுள்ளது. துணிவு படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், வாரிசு படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ.50 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.
இதற்கு காரணம், துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. மேலும், சதவீத கணக்கு மற்றும் அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஓட்டினர். இதனால், துணிவு படத்திற்கு அதிக லாபம் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட போட்டியில் துணிவு வெற்றி என்பது தான் உண்மை. இந்த படத்தினை தொடர்ந்து லியோவை முடித்துவிட்டு விஜய் தற்போது தளபதி68ல் பிஸியாக இருக்கிறார். ஆனால் துணிவுக்கு பின்னர் விடாமுயற்சியின் படப்பிடிப்பையே அஜித் இப்போது தான் தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
