Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தின் கதை இதுதான்!! போலீசால் வேட்டையாடப்படும் அஜித்!விடாமுயற்சி படத்தின் கதை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படப்பிடிப்பு கமுக்கமாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதை, நடிகர்கள், ஹீரோயின் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் படக்குழு கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. அதன் பிறகு அஜித் மற்றும் த்ரிஷா சென்னை திரும்பினர். சில நாட்கள் ஓய்வெடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொள்வார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை பற்றி ஒரு அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதாவது கணவன் மனைவியாக நடிக்கும் அஜித்தும் த்ரிஷாவும் ஒரு ட்ரிப்பிற்காக வெளியூர் செல்கிறார்களாம்.அங்கு த்ரிஷா காணாமல் போய்விடுகிறார்களாம். துரதிர்ஷ்டவசமாக த்ரிஷா வில்லன் குரூப்பில் சிக்கிவிட மனைவியை தேடும் போது ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதுதான் இந்தப் படத்தின் கதை எனகோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இது தெரிந்ததில் இருந்தே விடாமுயற்சி என்ற தலைப்பை பார்த்ததும் ஏதாவது ஒரு வெயிட்டான கதையாக இருக்கும் என்றுதான் கருதினார்கள். ஆனால் மனைவியை தேட அஜித் எடுத்துக் கொண்ட விடாமுயற்சி பற்றிய கதைதான் இது. இது அந்த அளவிற்கு உண்மை இல்லை என தற்போது தகவல் கிடைத்துள்ளது

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி படப்பிடிப்பு தகவல்கள் வெளியே லீக்காகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன கதாபாத்திரம், த்ரிஷா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகிய நிலையிலும் அவரைப் பற்றி எந்தவித அப்டேட்டுகளும் வெளியே வராமல் பாதுகாத்து வருகிறார்கள்.

அதேபோல், அஜித்தின் கதாபாத்திரங்கள் பற்றியும் எந்த செய்திகளும் வெளிவரவில்லை. இவர்களுடன் சேர்ந்து மகிழ் திருமேனியும் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் சைலண்டாகவே கதையை கொண்டு வருகிறார்.

இந்த அளவிற்கு ஒரு பெரிய ஹீரோ படத்தை கமுக்கமாக கொண்டு வருவது இதுவரை நடந்தது இல்லை. அதற்கு காரணம், எந்தவித அப்டேட்டுகளும் வெளியிட்டால் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பை வைத்து விடுவார்கள். அதனால் விடாமுயற்சி படத்தை பார்க்க வரும் வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கேஷுவலாக படத்தை பார்த்துட்டு போற மாதிரி இருக்க வேண்டும் என்று அஜித் போட்ட கட்டளையின்படி தான் மகிழ் திருமேனி ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது தளபதி 68 படத்தை சீக்ரெட் ஆக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் வெங்கட் பிரபு, மகிழ் திருமேனிடமிருந்து இந்த விஷயத்தை கத்துக்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT