நடிகர் ராஜ்கிரனின் உதவியால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற வடிவேலு, சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்துடன் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜயகாந்தின் உதவியாலும், திறமையாலும் சினிமாவில் உச்சத்தை தொட்ட வடிவேலு, தனது வெற்றியை தனது தலைக்கேறி ஏற்றிக்கொண்டார்.
தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்தையே பொது மேடையில் அவதூறாக பேசி அவமானப்படுத்தினார். இதனால், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தன. தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரையும் வடிவேலு துரோகம் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில், வடிவேலுவை அழைத்து செல்வதற்காக வந்த பேட்டரி காரில், இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி தனது குடும்பத்தினருடன் ஏறிக்கொண்டார். அதனை கவனித்த அங்கிருந்தவர்கள், இது வடிவேலுவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கார் என்று சொன்னார்கள். அதற்கு சிவமணி, “அவன்லாம் ஒரு ஆளா” வேறு காரில் வர சொல்லுங்க என ஒரே போடாக போட்டு காரிலிருந்து இறங்க மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. வடிவேலுவின் துரோகம் மற்றும் அவமதிப்புகளுக்கு இது ஒரு தண்டனை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
வடிவேலு தனது துரோகத்தை உணர்ந்து, மனம் மாறினால், மீண்டும் சினிமாவில் முன்னேறலாம். ஆனால், அது நடக்குமா என்பது சந்தேகம்தான்.
