Wednesday, October 28, 2026

தளபதி விஜய் நடிக்கும் GOAT படத்தின் கதை கரு இதுவா ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது.

லியோ படம் உருவாகி வந்தபோது, விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு “GOAT” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், GOAT படத்தின் ஒன்லைன் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசியுள்ள வெங்கட் பிரபு, “இளைய தளபதி போன்ற ஒரு ஹீரோவை ஏலியன்ஸ் கடத்திட்டு போய்ட்டா அங்க என்ன நடக்கும்” என்பது தான் GOAT படத்தின் லீட் என கூறியுள்ளார்.

இதன் மூலம் GOAT படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸ் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக GOAT படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. எனினும் அது உண்மையில்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

கதையில் வித்தியாசத்தை நுழைத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் வெங்கட் பிரபுவும், ஆக்ஷன்களில் அசத்தும் விஜய்யும் இணைந்து உருவாகும் GOAT படம் தமிழ் திரையுலகில் புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GOAT படத்தில் இரட்டை கேரக்டர்களில் நடிக்கும் விஜய்க்கு சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிக்கின்றனர்.

GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படம் வரும் 2024-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT