Wednesday, October 28, 2026

யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ! வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகை காஜல் பசுபதி தனது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஜல் பசுபதி, நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருடன் லிவ்விங் ரிலேஷனில் இருந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்தனர். சாண்டி, சில்வியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT

பிரிந்தாலும், சாண்டி மற்றும் அவரது குடும்பத்துடன் நட்புறவில்தான் இருக்கிறார் காஜல். சாண்டி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருவார் காஜல்.

இந்த நிலையில், காஜல் பசுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் மாலையுடன் திருமண கோலத்தில் இருக்கிறார். அந்தப் பதிவில், “ஒருவழியாக நான் இரண்டாவது திருமணம் செய்துவிட்டேன். உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன். திடீரென எடுத்த முடிவு என்பதால், யாரிடமும் சொல்ல முடியவில்லை. சீக்கிரம் உங்களைச் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், காஜல் பசுபதியின் இரண்டாவது திருமணம் பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கினர். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

காஜல் பசுபதி பகிர்ந்துள்ளப் புகைப்படம் பழையதாக இருக்கலாம் என்றும், அவர் எதற்காக இப்படி ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார் என்பதை அவர் மட்டுமே அறிவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து காஜல் பசுபதி எந்தத் தரப்பிலும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT